tamilnadu

img

“வக்பு சட்டத்திருத்தம் இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் முயற்சி”

“வக்பு சட்டத்திருத்தம் இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் முயற்சி”

கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மதுரை, பிப்.22- மதுரையில் ‘தூக்கு மேடை’ தியாகி  பாலுவின் 74-ஆம் ஆண்டு நினைவு தின   (பிப்.22) நிகழ்வில் சனிக்கிழமையன்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய மசோதா  திருத்த சட்டத்தை கடுமையாக விமர்சித்தார். “இந்தியாவில் மிக அதிகமான சொத்துக்களை கொண்டுள்ள வக்பு வாரிய  நிலங்களை பறித்து, இஸ்லாமிய வழிபாட்டு  முறையை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

ஒரு சமூ கத்தின் வழிபாட்டு உரிமையை பறித்து, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பது இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்” என்று  அவர் எச்சரித்தார். “சிறுபான்மை - பெரும்பான்மை என்ற பேதத்தை உருவாக்கி மக்களை மோத விட்டு, சமூகத்தை அடிமைப்படுத்தும் காரி யத்தை பாஜக வேகமாக செய்து வரு கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, பத்தி ரிகை சுதந்திரம் பறிக்கப்படுகிறது. எதிர்க்  குரல்கள் அடக்கப்படுகின்றன.

அறிவிக்கப்  படாத அவசரநிலை போன்ற சூழ்நிலையே நிலவுகிறது” என்று குற்றம் சாட்டினார். “இன்றையச் சூழலில், இந்திய நாடு  மிக மோசமான நிலைமையை நோக்கி பய ணித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகள், நிலப்பிரபுக்கள் கூட்டணி  ஆதிக்கம் செலுத்துகிறது. அம்பானி, அதானி போன்றோருக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் வரிகள் தள்ளுபடி செய்யப்  படுகிறது. ஆனால் சாதாரண விவசாய தொழிலாளர்களுக்கான நூறு நாள் வேலைத் திட்டம் வெட்டப்படுகிறது. இந்தி மொழியை திணித்து தமிழ் மண்  ணுக்கு பகிரங்கமாக அநீதி இழைக்கி றார்கள்.

50 ஆண்டுகளுக்கு மேலாக இரு மொழிக் கொள்கையில் கல்வியில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தில், மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தியைத்  திணிக்க முயற்சிக்கிறார்கள்” எனவும் விமர்சித்த கே. பாலகிருஷ்ணன், “இந்த பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த, மதச்சார்  பற்ற கொள்கை அமைப்புகளை ஒன்றி ணைக்க வேண்டும்” எனவும் அவர் வலி யுறுத்தினார்.