நாமக்கல், பிப்.22- நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் வெள்ளியன்று தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் ‘ஊட்டச்சத்து மூலம் மன அழுத்தத்தை நிர்வகித்தல் முழுமை யான அணுகுமுறை’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளியன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியர் கயல்விழி பாலமுருகன், ‘மனநலம் மற்றும் மன அழுத்தக் கட்டுப்பாடுகளும்’ என்ற தலைப்பிலும், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி பால்வளத் துறை பேராசிரியர் சி.பாண்டியன், ‘பால் சம்பந் தமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை மூலம் மன அழுத்த கட்டுப்பாடுகள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இந்நிகழ்வில் தருமபுரி மண்டலத்தில் உள்ள 11 கல்லூரிகளில் இருந்தும், பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கள், கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.