சேலம், பிப்.22- சேலம் மாவட்டத்தில் ரூ.71.68 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரா.ராஜேந்திரன் ஆகியோர் சனி யன்று அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட் டப்பணிகளை திறந்து வைத்தனர். சேலம் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.71.68 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் ஆகி யோர் சனியன்று அடிக்கல் நாட்டி, முடி வுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த னர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பேசுகையில், சேலம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,962 கோடியும், 6 நகராட்சிகளுக்கு ரூ.387.30 கோடியும், 31 பேரூராட்சிகளுக்கு ரூ.180.68 கோடி யிலான பணிகள் என மொத்தம் ரூ.2577.90 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது, என்றார். இவ்விழாவில் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, அ.மணி, தே.மலையரசன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் நே.பொன்மணி, நகராட்சி நிர் வாகத்துறை கூடுதல் இயக்குநர் செ. விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவ லர் ரா.ரவிக்குமார், சேலம், மாநகராட்சி ஆணையர் (பொ) கே.பாலசுப்ரமணி யன், துணை மேயர் மா.சாரதா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.