tamilnadu

img

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 12 பேர் உயிரிழந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்ற நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 

;