tamilnadu

img

ஆப்கானிஸ்தான் தலைவர்கள், தலிபான்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்யா

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்கான்  தலைவர்கள் மற்றும் தலிபான்களிடையே அமைதி பேச்சுவார்த்தையை ரஷ்யா நடத்தியுள்ளது.

கடந்த சுமார் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தலிபான்களுக்குமிடையே உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இதற்காக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் ரஷ்ய அரசு ஆப்கானிஸ்தானிற்கான அமைதிப்பேச்சு வார்த்தையை முன்னெடுத்துள்ளது.

இதற்காக நேற்று ஒரு பேச்சுவார்த்தை ஒன்று நடந்து முடிந்துள்ளது. ரஷ்யா சார்பில் ஆப்கானிஸ்தான் தலைவர்களுக்கும், தலிபான் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையேற்று தலிபான் சார்பாக அதன் தலைவர் முல்லா பராதர் தலைமையில் 14பேர் கொண்ட குழு ரஷ்யா வந்திருந்தார். தலிபான்கள் சார்பில் பேசிய அதன் தலைவர் முல்லா, ஆப்கான்ஸ்தான் அமைதியை விரும்புகிறது; முதலில் நாம் அதற்கான தடைகளை நீக்க வேண்டியுள்ளது என அவர் கூறினார். மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்புகளை வெளியேற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து இந்த வாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டுப்படைகளை முதலில் வெளியேற்ற வேண்டும் என தலிபான்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

;