ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி சுமார் 35 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் பர்வான் மாகாண பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 76 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாகாண மருத்துவமனையின் தலைவர் அப்துல் காசிம் தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ள பாதிப்பு குறித்து மாகாண செய்தித் தொடர்பாளர் வாகிதா ஷாகர் கூறுகையில், நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.