games

img

289 ஆட்டங்களில் 400 விக்கெட்டுகள் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் புதிய சாதனை 

டி20 உலகக் கோப்பை போட்டியில் 289 ஆட்டங்களில் 400 விக்கெட்டுகள் எடுத்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் புதிய சாதனை படைத்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இது அவருடைய 400-வது டி20 விக்கெட் ஆகும். இந்நிலையில், ஆறு வருடங்களில் 289 ஆட்டங்களில் விளையாடி 400 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.  364 ஆட்டங்கள் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி டுவைன் பிராவோ இந்த சாதனையை முதன் முறையாகப் படைத்தார். அதற்கு அடுத்ததாக, இம்ரான் தாஹிர் 320 ஆட்டங்களிலும் சுநீல் நரைன் 362 ஆட்டங்களிலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்துள்ளனர். எனினும் ரஷித் கானுக்கு 400 விக்கெட்டுகளை எடுக்க 289 ஆட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளன. இதனால் குறைந்த ஆட்டங்களில் 400 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற சாதனையை இவர் படைத்துள்ளார். 

டி20 ஆட்டங்களில் விளையாட ஆரம்பித்து ஆறு வருடங்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ரஷித் கான் இந்த சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.