“எதிர்கால தலைமுறையின் ஆவேச ஊற்றே, லால்சலாம்”
அன்புத் தோழர் வி.எஸ்.அச்சுதா னந்தன் பற்றி கேரள முதலமைச் சர் பினராயி விஜயன் உணர்ச்சிப் பூர்வமான குறிப்பை முகநூலில் எழுதி யுள்ளார். ஒரு தனித்துவமான அமைப் பாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் என்றும், அவர் ஆலப்புழாவின் பெரிய சுடுகாட்டில் எரிந்து தணிந்தார் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த குறிப்பில்,”அனைத்து மதிப்பீடுகளையும் மீறிய மக்கள் திரளும் நேரக்கட்டுப்பாடும் தோழர் வி.எஸ். எப்படிப்பட்டவர் என்பதை நம் அனை வருக்கும் நிரூபித்தது. லட்சக்கணக்கான மக்களின் இதயங்களிலிருந்து எழுந்த லால் சலாம் முழக்கங்கள் தோழர் வி.எஸ் ஸை வழியனுப்பின. சிபிஎம் என்ற அர சியல் இயக்கம் தோழர் வி.எஸ். உட்பட 32 தலைவர்களின் தீர்மானத்திலிருந்து தொடங்கியது. அந்த 32 பேரின் கடைசி கண்ணியே எரிந்து அடங்கியதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தோழர் வி.எஸ் உடனான உறவு எவ்வ ளவு ஆழமானது என்பதை விவரிக்க முடி யாது. வி.எஸ். எல்லா வகையிலும் ஒரு தலைவர். நாம் அனைவரும் போற்றக் கூடிய ஒரு தலைவர். தியாகத்திற்கு வழி வகுத்த வாழ்க்கை. அதனுடன் ஒப்பிட எதுவும் இல்லை. அந்த மகத்தான வாழ்க்கையின் திரை விழுந்தது. புன்னப்புரா வயலாரின் சிலிர்ப்பூட் டும் வரலாறு துடிக்கும் பூமியில்; தோழர் கிருஷ்ண பிள்ளை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாவீரர்கள் ஓய்வெடுக்கும் மணல் திட்டில்; வி.எஸ்ஸின் உடல் எரி யும்போது, புரட்சிகர கேரளாவின் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வரு கிறது. லட்சக் கணக்கான மக்களின் கண் கள் விரிய எழும் முழக்கம், “தோழர் வி. எஸ் இறக்கவில்லை, அவர் நம் மூலமாக வாழ்கிறார்” என்பது நம்பிக்கை அளிக்கி றது. கம்யூனிஸ்ட் தோழர் வி.எஸ்ஸுக்கு மரணம் இல்லை. வி.எஸ் இந்த கட்சியின் சொத்து. வி.எஸ் இந்த இயக்கத்தின் இதயம். தோழர் வி.எஸ் காட்டிய தியாகம் மற்றும் சகிப்புத்தன்மையின் பாதைகளில் இன்னும் நிறைய செல்ல வேண்டியுள் ளது. எல்லா காலகட்டங்களையும் கடந்து, தோழரைப் பார்க்க கூடியிருந்த மக்க ளின் இதயப்பூர்வமான விருப்பங்களை நிறைவேற்ற நாம் மேலும் மேலும் முன்னேற வேண்டும். அந்தப் பய ணத்தில், வி.எஸ்ஸை ஒரு ஒளிக்கற்றை யாகவும், ஆற்றலாகவும் கொண்டுள் ளோம். பெரிய சுடுகாட்டில் நடந்த இரங்கல் கூட்டத்தில் மனதில் இருந்த அனைத்தையும் என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. அன்புள்ள தோழரே பிரியாவிடை. தலைமுறைகளின் புரட்சி கர நாயகனே, எதிர்கால தலைமுறை யின் ஆவேச ஊற்றே, லால்சலாம்” இவ்வாறு முகநூல் பதிவில் குறிப்பிட் டுள்ள முதல்வர், வி.எஸ் உடலை சிதை யேற்றும்போது எடுத்த புகைப்படத்தை யும் பகிர்ந்துள்ளார்.