tamilnadu

img

‘தமிழகத்தில் காவி அணியின் கனவு திட்டம் பலிக்காது’

‘தமிழகத்தில் காவி அணியின் கனவு திட்டம் பலிக்காது’

சிதம்பரம் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

சிதம்பரம், ஜூலை 15 - “தமிழகத்தில் மார்க்சியம், அம்பேத்கரியம், காந்திய வழியில் வந்தவர்கள் ஓர் அணியில் நிற்கும் போது, காவி அணியின் கனவு  திட்டம் பலிக்காது” என்று சிதம்ப ரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார். சிதம்பரத்தில் தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களுடன்  ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சமூக  நீதி காவலர் எல்.இளையபெரு மாளின் நூற்றாண்டு நினைவு அரங் கத்தையும் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பரமேஸ்வர நல்லூர் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “கடந்த 2021-க்கு முன் மக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்களுக்காக  தனித் துறை உருவாக்கப்பட்டு நூறு  நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்ட தாக தெரிவித்தார்.  பின்னர் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ் 5000 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம்  மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக  கூறினார். புதிதாக தொடங்கப்பட்ட ‘உங்க ளுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் தமிழ கம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள்  நடத்தப்படும் என அறிவித்தார். இதில் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று 46 சேவைகளுக்கான விண் ணப்பங்களை வழங்குவர். இந்த முகாம்களில் மட்டும் மகளிர் உரி மைத் தொகைக்கான விண்ணப்பங் கள் பெறப்படும்” என தெரிவித்தார். எல்.இளையபெருமாள் பற்றி  பேசிய முதலமைச்சர், “அயோத்தி தாசர் பண்டிதர், தாத்தா ரெட்டமலை  சீனிவாசன், எம்.சி.ராஜா, சிவராஜ், சாமி சகஜானந்த ஆகியோர் வரிசை யில் கம்பீரமாக போராடியவர் என  குறிப்பிட்டார். அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் தலைவராக இருந்த இளையபெரு மாள் மூன்று ஆண்டுகள் இந்தியா முழுவதும் பயணித்து சாதிய கொடுமை மற்றும் தீண்டாமை குறித்து  ஆய்வு செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் அனைத்து சாதியைச் சேர்ந்த 29 அர்ச்சகர்கள் தமிழக கோவில்களில் நியமிக்கப்பட்டனர்” என முதல மைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த மேடையில் மார்க்சிய இயக்கத்தின் தலைவர்கள், காந்திய வழி தலைவர்கள், அம்பேத்கர் வழி  தலைவர்கள் ஒற்றுமையாக இருப்ப தாக குறிப்பிட்டார். “இதுதான் ஓரணி யில் தமிழ்நாடு. தமிழ்நாடு ஓரணியில்  நிற்கும்போது எந்த தில்லி காவி அணி யின் கனவு திட்டமும் தமிழகத்தில் பலிக்காது” என உறுதியாக தெரி வித்தார்.