tamilnadu

img

விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் நினைவு தினம் அமைச்சர்கள் - அரசியல் கட்சியினர் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர்கள்  மருதுபாண்டியர் நினைவு தினம் அமைச்சர்கள் - அரசியல் கட்சியினர் மரியாதை

சிவகங்கை, அக். 24 - விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்களின் 224-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அக்டோபர் 24  அன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூரில் அமைந்துள்ள நினைவு மண்ட பத்தில் அவர்களது உருவச்சிலைகளுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்தும், நினைவுத்தூணிற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் அமைச்சர்கள் கே.ஆர். பெரிய கருப்பன், இ. பெரியசாமி, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், முனைவர் பழனி வேல் தியாகராஜன்,  சிவ.வீ. மெய்ய நாதன், டாக்டர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதி நிதிகள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன், மருது சகோதரர்களின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.