tamilnadu

img

மோடி பற்றி கூடுதல் தகவல் இல்லையாம் 4.90 லட்சம் புத்தகங்களை திரும்பப் பெற்ற ராஜஸ்தான் பாஜக அரசு

மோடி பற்றி கூடுதல்  தகவல் இல்லையாம் 4.90 லட்சம் புத்தகங்களை திரும்பப் பெற்ற ராஜஸ்தான் பாஜக அரசு

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பஜன் லால் சர்மா உள்ளார்.  இந்த பஜன் லால் சர்மா அரசு கல்விக்காக எவ்வித முன்னேற்பாடு களை மேற்கொள் வது இல்லை. மாறாக கடந்த காங்கிரஸ் அர சால் அறிமுகப்படுத் தப்பட்ட பாடநூல்களை  ரத்து செய்வதே தற்போதைய ராஜஸ்தான் அரசின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இம்முறை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “ஆசாதி கே பாத் கா ஸ்வர்ணிம் பாரத்” (விடுதலைக் குப் பின் ஒளிரும் இந்தியா) என்ற பாட நூல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள் ளது. நீக்கப்பட்ட  புத்தகம் இந்தியாவின் விடுதலைக்குப் பின், அடைந்த முன் னேற்றங்களை விளக்குகிறது. ஆனால் பிரதமர் மோடி, பாஜக ஆட்சிக் காலத்தின் சாதனைகள் போதுமான அளவில் இடம்பெறவில்லை எனக் கூறி, ரூ.2.5 கோடி செலவில், 4.90 லட்சம் புத்தகங்க ளை பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது.