tamilnadu

img

தொழில்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்

தொழில்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்

பிரிட்டன் தூதர் பாராட்டு

சென்னை, செப். 6- தொழில்துறை மற்றும் உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருவதை இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய  தூதர் விக்ரம் துரைசாமி பாராட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கி லாந்து பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் முதலீடு மற்றும் உலகளாவிய  ஈடுபாடு குறித்து இந்திய தூதரை லண்ட னில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ் நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் உலகளாவிய நடவடிக்கைகளுக்கு இந்தியத்  தூதர் விக்ரம் துரைசாமி தனது பாராட்டு களைத் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டின் தொழில்துறை, சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பொருளாதார செயல்திறனையும் பாராட்டினார்.  இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும்  உள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்ப மான இடங்களில் தமிழ்நாடு ஒன்றாகும் என்று தெரிவித்தார். சமீபத்தில் நிறைவடைந்த இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத் தைப் பயன்படுத்திடும் சிறந்த நிலையில் உள்ள இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு  ஒன்றாகும் என்பதை அவர் எடுத்துரைத் தார்.  தமிழ்நாடு முதலமைச்சரின் இங்கி லாந்து பயணத்தின்போது மேற்கொள்ளப் பட்ட தமிழ்நாட்டின் முதலீட்டு புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் எதிர்காலத்தை நோக்கியதாகவும், உலகளாவிய சந்தை  வாய்ப்புகளுடன் திட்டமிட்ட ரீதியில் இணைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில்  தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி  வருவதை இந்திய தூதர் குறிப்பாக பாராட்டினார். புதிய தடையற்ற வர்த்தக  ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் இந்தியா வில் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவ  விரும்பும் இங்கிலாந்து நாட்டின் பல்கலைக் கழகங்களுக்கு தமிழ்நாடு சிறந்த தேர்வாக இருப்பதைக் குறிப்பிட்டார். சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கான ஒழுங்குமுறை ஆதரவு மற்றும் உள்கட்ட மைப்பு உள்ளிட்ட இங்கிலாந்து-தமிழ்நாடு கல்வி கூட்டாண்மைகளை எளிதாக்குவதில் மாநிலத்தின் முயற்சிகள் குறித்து முதல மைச்சர் இந்தியத் தூதருடன் பகிர்ந்து கொண்டார். பல நிறுவனங்களுடன் நடந்து  வரும் சந்திப்புகள் மற்றும் எக்ஸிடர்  பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திடப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவர் குறிப்பிட்டார்.