tamilnadu

img

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் எதிரொலி: பயனாளிகளுக்கு நிதி வழங்க அதிகாரிகள் ஒப்புதல்

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் எதிரொலி: பயனாளிகளுக்கு நிதி வழங்க அதிகாரிகள் ஒப்புதல்

திருவண்ணாமலை,பிப்.23- திருவண்ணாமலை மாவட்டம் ஆனானந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி, ஏழுமலை, முனுசாமி, கோவிந்தன் மற்றும் மதுராம்பட்டு தங்கராஜ்  உள்ளிட்டோருக்கு கூட்டுறவுத் துறை  சார்பில் கால்நடை பராமரிப்பு கடன் மற்றும் விவசாய பயிர் கடன் வழங்காமல் காலம் கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடன் வழங்காமல், லஞ்சம் முறைகேடு ஆகிய செயல்களில் ஈடுபடும் தண்டரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை கண்டித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று (பிப். 24) ஆர்ப்பாட்டம் நடத்த திட்ட மிடப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாளர், கள மேலாளர், மேற்பார்வை யாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன் பேரில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜி.அண்ணாமலை, செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ரஜினி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.கே. வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் ராமசாமி ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அப்போது பிப்ரவரி மாத இறுதிக்குள் பால் உற்பத்தி யாளர்களுக்கு, பயனாளிகளுக்குரிய நிதி வழங்கு வதாகவும், விவசாய விரோத போக்கில் ஈடுபடும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.