தோழர் கே.ஆதிமூலம் படத்திறப்பு
சிதம்பரம், பிப். 23- திருமுட்டம் அருகே பேரூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட முதுபெரும் தோழர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஆதிமூலம் படத் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். கட்சியின் முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா அவரது படத்தை திறந்து வைத்தார். இதில் மாநில குழு உறுப்பினர் வாலன்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், பிரகாஷ். சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் தேசிங்கு, ரவிச்சந்திரன், கோவிந்தராஜன், ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் தெரேசாகேத்தரின், திருமுட்டம் சி.பி.எம் வட்டச் செய லாளர் தினேஷ்பாபு, வட்டக் குழு உறுப்பினர்கள் வெற்றி வீரன், தங்கசாமி, பாண்டுரங்கன், எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழ்நாடு கரும்பு விவசாயம் சங்க நிர்வாகி கள் ராமச்சந்திரன் அண்ணாதுரை, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அந்துவன், அரிகிருஷ்ணன் மற்றும் பொது மக்கள், குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
