tamilnadu

ஜூலை 19-இல் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்!

ஜூலை 19-இல் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்!

புதுதில்லி, ஜூலை 3 - நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.  இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்துள்ள தாக கூறியிருக்கும் அவர், சுதந்திர தின கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் நாடாளுமன்ற அமர்வு இருக்காது எனவும் அறிவித்துள்ளார்.  வழக்கமாக நாடாளுமன்ற மழைக் க்கால கூட்டத் தொடர், ஆகஸ்ட் 12 அல்லது 13-ஆம் தேதி வரையே நடைபெறும். ஆனால் இந்த முறை கூடு தலாக ஒரு வாரம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் காப்பீடு தொடர்பான மசோதா உட்பட பல மசோதாக்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பா ர்க்கப்படுகிறது. இந்த மசோதாக்களில் அணுசக்தித் துறையை தனியார் மயமாக்கும் மசோதாவும் இருக்கும் என கூறப்படுகிறது.