திருவண்ணாமலையில் 19,19,159 வாக்காளர்கள்
திருவண்ணாமலை,பிப்.23- திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்ப கராஜ் திங்களன்று (23.02.2026) இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 18,69,740 வாக்கா ளர்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பிறகு 19.12.2025 முதல் 30.01.2026 வரை கோரிக்கை கள் மற்றும் ஆட்சேபணை மனுக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் திங்களன்று (பிப்.23) வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டி யலில்,மாவட்டம் முழுவதும் மொத்தம் 26,834 ஆண்கள், 32,956 பெண்கள், 32 இதரர் என மொத்தம் 59,822 வாக்காளர்கள் புதிய தாக இணைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர் கள், நிரந்தர இடம் பெயர்வு, இருமுறை பதிவு செய்தவர்கள் என மொத்தம் 10,403 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலில் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கல சப்பாக்கம், போளூ,ர் ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய எட்டு சட்டமன்ற தொகுதி களில், மொத்தம் 9,43,727 ஆண்கள், 9,75,277 பெண்கள், 155 இதரர் என மொத்தம் 19,19,159 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டிய லில் உள்ளனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், செய்யார் சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின்.வருவாய் கோட்டாட்சி யர்கள் ராஜ்குமார் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), உதவி தேர்தல் நடத்தும் அலு வலர்கள், தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) தியாகராஜன் மற்றும் அனைத்து அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
