tamilnadu

img

பட்டா கேட்டு பழங்குடி சங்கம் மனு

பட்டா கேட்டு பழங்குடி சங்கம் மனு

கடலூர்,பிப்.23- திட்டக்குடி, வேப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழக்கூடிய பழங்குடி மக்களுக்கு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடி மக்கள் நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமையில் மனு அளிக்கப் பட்டது. மணல்மேடு, எழுத்தூர், கொடிக்களம், அரங்கூர், கோழியூர், ஆதமங்கலம், சிறு முளை ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங் களில் இருளர், பழங்குடி குறவர், ஆதி திரா விடர்  உள்ளிட்ட மக்களுக்கு இலவச மனை  பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், பழங்குடி மக்கள் நல சங்கம் கடலூர் மாவட்டம் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அமர்நாத், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஆர்.கலைச் செல்வன், திட்டக்குடி வட்டச் செயலாளர் வீ.அன்பழகன், வேப்பூர் வட்டக்குழு உறுப்பி னர் பொன்.சோமு,  ஜி.வேல்முருகன், மனி தம் அமைப்பின் மாவட்ட கன்வீனர் எம்.ஜே.லெனின், பழங்குடி சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ்  உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.