பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வாலிபர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
சென்னை, ஆக. 4- பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்க வேண்டும் என வாலிபர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திரு வொற்றியூர்-எண்ணூர் பகுதி 20ஆவது மாநாடு தலைவர் ஆர்.ஸ்டாலின் தலைமையில் ஞாயிறன்று (ஆக. 3) நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ராஜ்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவியரசி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் இசக்கி நாகராஜ் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் சேகுவேரா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர் ஜி.நித்யராஜ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக சுகன்யா வரவேற்றார். தமிழேந்தி நன்றி கூறினார். தீர்மானங்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினசரி வழங்க வேண்டும், அரசு பள்ளிகளை சீரமைக்க வேண்டும், வடி வுடையம்மன் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க எலிவேட்டர் அமைக்க வேண்டும், விபத்துக்கு காரணமாக இருக்கும் கண்டெய்னர் லாரிகள் சாலையில் நிறுத்துவதை தடுக்க வேண்டும், இ பஸ்களை தனியாரிடம் வழங்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக இசக்கி நாகராஜ், செயலாளராக சே.புவியரசி, பொருளாள ராக ராஜ்குமார் உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.