tamilnadu

img

தனட்சுமி சீனிவாசன் மருத்துவமனையை அரசே ஏற்க வேண்டும் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தனட்சுமி சீனிவாசன் மருத்துவமனையை  அரசே ஏற்க வேண்டும் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

பெரம்பலூர், ஜூலை 31-  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏழ்மையான நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி நீங்கள் கிட்னி தானம் செய்தால் 5 லட்சம், 10 லட்சம் தருவதாக அப்பாவிகளை தங்களது வலைக்குள் சிக்கினர். அவர்களிடமிருந்து கிட்னியை பெற்று 50 லட்சம் முதல் 60 லட்சம் வரை லாபம் பார்ப்பதாக திருச்சி சிதார் மருத்துவமனை, நாமக்கல் அராபி கிட்னி கேர் சென்டர் மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகள் பற்றி கடந்த ஒரு சில மாதமாகவே சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.  இதனைத் தொடர்ந்து, அரசின் நடவடிக்கைகளின் காரணமாக மூன்று மருத்துவமனைகளுக்கும் கிட்னி சிகிச்சை செய்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பலூரில் இயங்கிவரும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையின் கிட்னி திருட்டை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு புதன்கிழமை இந்திய ஜனநாயக வாலிபர் சார்பில், சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் ரெங்கநாதன், மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் சின்னப்பொண்ணு, விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்டச் செயலாளர்  கலையரசி, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் வேப்பூர் சத்தியசீலன் ஆகியோர்  உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, பெரம்பலூரில் உள்ள தலைட்சுமி சீனிவாசன் மருத்துவமனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். கிட்னி திருட்டு நடைபெற்றதைத் தொடர்ந்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவின் மீது, குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொள்ளாவிட்டால் தங்களின் போராட்டம் மேலும் தீவீரமடையும் என்று தெரிவித்தனர். இறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னம் வட்டக் குழு ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து நன்றி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.