வாலிபர் சங்கத் தலைவர் வைரமுத்து சாதி ஆணவப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வலங்கைமான், செப்.17 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவர் வைரமுத்துவை சாதி ஆணவப் படுகொலை செய்த சாதி வெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வலியுறுத்தி, சங்கத்தின் வலங்கை மான் ஒன்றியம் சார்பாக ஆலங்குடி கடை வீதி யில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் கே.தினேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பி.விஜய், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.இளங்கோவன், ஜெ.ஜெயராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அமைப்பின் ஒன்றிய பொருளாளர் எஸ்.சிவகுரு, துணைச் செயலாளர் எஸ்.சபரீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக உடனே தனிச் சட்டம் இயற்றக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் சிக்கல் கடைத் தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.