tamilnadu

img

போதைப் பொருட்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த வாலிபர் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு

போதைப் பொருட்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த வாலிபர் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை, ஜூலை 30 - போதை பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைத் தலைவர் வெட்டப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் மாநகராட்சி, பெருங்க ளத்தூர்  தேவநேசன் நகரைச் சேர்ந்தவர் மணிதாமஸ். இவர் வாலிபர் சங்கத்தின் தேவநேசன் நகர்  கிளைத்தலைவராக உள்ளார். போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கவும், அத னால் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும் பிரச்சாரம் செய்து வருகிறார். இத னால்  அவர் மீது போதைக் கும்பல்  கோபத்தில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று (ஜூலை 27)  பீர்க்கன்கரணையில் உள்ள தனது கடையில் மணி தாமஸ் இருந்துள்ளார். அப்போது, 17 வயது சிறுவன் விஷ்வேஸ்வரர் பாதுகாப்பு கேட்டு ஓடி வந்து கடையில் தஞ்சம் புகுந்துள்ளார். முகத்தில் துணி கட்டியபடி கடைக்குள் ஓடிவந்த 3 பேர் கொண்ட கும்பல் சிறு வனை வெட்ட முயன்றதை மணிதாமஸ் தடுத்துள்ளார். இதனால் அந்த கும்பல், “இவனை வெட்டுனாதான் இந்த பகுதியில் இருக்கும் எல்லாருக்கும் பயம் வரும்டா” என்று கூறிய படி மணி தாமசை சரமாரியாக வெட்டி யுள்ளது. இந்த தாக்குதலில் மணி தாமசுக்கு பின் தலையில் இரண்டு வெட்டு, நடுமுதுகில் கத்தி குத்து, கையில் வெட்டு விழுந்தது. சிறுவன் விஷ்வேஸ்வரனுக்கு முதுகில் வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து அந்த கும்பல் இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த நண்பர்களின் வண்டியில் ஏறி தப்பி சென்றது. இதன்பிறகு மணிதாமசுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வாலிபர் சங்கம் கண்டனம் இதனை கண்டித்து வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ்குமார், செயலாளர் தீ.சந்துரு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தும் கும்பலை சார்ந்தவர்கள். இவர்களால் அந்த பகுதியில் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. ஆனால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளது.  இதன்மூலம், போதை பழக்கத்திற்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று மறைமுகமாக காவல்துறை எச்சரிக்கிறதா? போதைக்கு எதிராக பேசக்கூடியவர்கள் எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என்பதையே   இந்த தாக்குதல் உணர்த்துகிறது.  வாலிபர் சங்கம் தலையிட்ட பிறகே சமூக விரோதி கள் 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்கு பதிந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர் 5 பேரை கைது செய்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி முழுவதும் போதைப்பொருள் விற்பனை, புழக்கத்தை தடுக்க காவல்துறை தனி குழு அமைக்க வேண்டும். போதை பழக்கத்திற்கு எதிராக செயல்படுகிறவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.