tamilnadu

img

புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் வாலிபர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் வாலிபர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.17 - புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை் மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் புதுக்கோட்டை மாவட்ட 17 ஆவது  மாநாடு கறம்பக்குடியில் செப்.16, 17  தேதிகளில் நடைபெற்றது. புதன் கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை  வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஆ.குமாரவேல் மாநாட்டு கொடியை ஏற்றினார். மாவட்ட துணைச் செயலா ளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் அஞ்சலி  தீர்மானம் வாசித்தார். ஒன்றியத் தலை வர் எஸ்.சின்னத்துரை வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில துணைத் தலைவர் டி.சந்துரு உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.மகாதீர்,  பொருளாளர் ஆர்.தினேஷ் ஆகியோர் முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர்,  இளைஞர் பெருமன்ற மாவட்டச் செய லாளர் மாரிமுத்து, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வசந்த குமார் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநில துணைச்  செயலாளர் செல்வராஜ் நிறைவுரை யாற்றினார். மாவட்டத் தலைவராக எஸ். ஜனார்த்தனன், செயலாளராக ஆர்.மகா தீர், பொருளாளராக ஆர்.தினேஷ், துணைத் தலைவர்களாக குமரேசன், பிர காஷ், துணைச் செயலாளர்களாக கோ பால், சுருதி உள்ளிட்ட 25 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் முன்னோடிகள் கவுரவிப்பு வாலிபர் சங்கத்தில் மாவட்டச் செய லாளர், தலைவர் பொறுப்புகளில் பணி யாற்றிய சங்கத்தின் முன்னோடி களான கந்தர்வகோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்  செயலாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த. அன்பழகன், ஒன்றியச் செயலாளர் ஆ. குமாரவேல் ஆகியோர் மாநாட்டில் கவு ரவிக்கப்பட்டனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு களை உருவாக்கும் வகையில் புதிய  தொழில் வாய்ப்புகளை ஒன்றிய, மாநில  அரசுகள் உருவாக்க வேண்டும். நீராதா ரங்களை பெரிதும் பாதிக்கும் தைலமரக்  காடுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட் டத்தில் மலர் உற்பத்தியை பயன்படுத்தி  வாசனைத் திரவிய தொழிற்சாலை, முந்திரி சாகுபடியை பயன்படுத்தி முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிற் சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த  வேண்டும். புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட புதுக்கோட்டை  நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும்  கொண்டுவர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.