states

img

அசாம்: போர் விமானம் விபத்து - 2 விமானிகள் உயிரிழப்பு

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
அசாமில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான SU-30 MKI போர் விமானம் நேற்று இரவு சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது. இது குறித்து விமானப்படை ஆய்வு மேற்கொண்டபோது, பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயிற்சியில் ஈடுபட்ட விமானிகள் அனுஜ் மற்றும் பூர்வேஷ் துரக்கர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.