தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வரும் ஜூலை 17- ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் வீட்டின் நிலை, வசதிகள், சொத்துக்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகள் இடம் பெறும் என்றும், தரவுகள் டிஜிட்டல் முறையில் பதிவுச் செய்யப்படும் என்றும், இப்பணியில் சுமார் 50,000 அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
