tamilnadu

img

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!

மாநிலங்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இருந்து 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்.2-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில், இந்த இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக-வில் இருந்து திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸில் இருந்து கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக-வில் இருந்து எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக-வில் இருந்து எம்.தம்பிதுரை, பாமக-வில் இருந்து அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இத்தேர்தலில் போட்டியிட பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். 
இந்த நிலையில், திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை, அன்புமணி ஆகியோரின் வேட்புமனுக்கள் இன்று ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதனின் வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.