tamilnadu

img

நவபாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் யெச்சூரியின் சிந்தனைகள் வழிகாட்டும் : உ.வாசுகி

நவபாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில்  யெச்சூரியின் சிந்தனைகள் வழிகாட்டும் : உ.வாசுகி

தருமபுரி, செப்.21- மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீத்தா ராம் யெச்சூரியின் முதலா மாண்டு நினைவு தினம் மற்றும் மார்க்சிஸ்ட் சந்தா நிதி யளிப்பு நிகழ்ச்சி தருமபுரியில், செப்டம்பர் 20 சனிக்கிழமை  நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, தோழர் யெச்சூரியின் அர சியல் பணிகளை எடுத்து ரைத்து, தற்கால நவபாசிச போக்குகளுக்கு எதிரான போராட்டத்தில் அவரது சிந்த னைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் ‘தமிழக வரலாற்றில் கம்யூனிஸ்ட்கள்’ குறித்து உரையாற்றினார். யெச்சூரியின் சிந்தனைகள் தோழர் யெச்சூரி 18ஆவது அகில இந்திய மாநாட்டில் தனியார்மயத்திற்கு எதிரான முக்கிய ஆவணத்தை முன் மொழிந்தார் என்று வாசுகி குறிப்பிட்டார். “அடையாள அர சியல், என்ஜிஓ செயல்பாடுகள், உலகமயம், தனியார்மையம், தாராளமயம் குறித்த ஆய்வை அவர் முன்வைத்தார். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் தனியார்மயம் வந்த பிறகு அதை எப்படி எதிர்கொள்வது என்ற முக்கிய கேள்வியை எழுப்பினார்” என்றார். “மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகளை ஏழை களுக்கு ஒதுக்க வேண்டும், கட்டணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை  மாணவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு செய்து கல்வி கட்டணம் கேட்கக்கூடாது என்ற கொள்கையை அவர் வலி யுறுத்தினார்” என்றார். என்ஜிஓ அரசியல் குறித்தும் வாசுகி விளக்கினார். “சில என்ஜிஓக்கள் போராடு பவர்கள் பக்கம் நிற்கின்றன. ஆனால் சில என்ஜிஓக்கள் சர்வதேச நாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொண்டு போராடு பவர்களை மட்டுப்படுத்து கின்றன என்ற முக்கிய அம்சத்தையும் யெச்சூரி எடுத்துரைத்தார்,” என்றார். நவபாசிச அரசியலின் ஆபத்து நவபாசிசம் குறித்து விரி வாக பேசிய வாசுகி, “ஹிட்லர், முசோலினி காலத்து பாசி சத்தின் புதிய வடிவம்தான் நவ பாசிசம். கடுமையான பொரு ளாதார நெருக்கடி முத லாளித்துவத்தைச் சூழ்ந்தது. மக்கள், முதலாளிகள், பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இந்த பொருளாதார நெருக்கடியை ஆளும் வர்க்கம் உழைப்பாளி மக்களின் மீது சுரண்டியது. இதற்கு எதிராக போராடிய தொழிற்சங்கத்தினரை நசுக்கினர், மாற்றுச் சிந்தனை யாளர்களை ஒடுக்கினர்.  இத னால்தான் உலகப் போர்கள் ஏற்பட்டன” என்று ஆழமாக விளக்கினார். “1914-1918 முதல் உலகப்  போர், 1939-1945 இரண்டாம் உலகப்போர் நடந்தது. ஏகாதிபத்திய நாடுகளுக் கிடையேயான போட்டி, முரண்பாடுகளே யுத்தத்திற்கு காரணம். பாசிசத்திற்கு எதி ராக போராடிய கம்யூனி ஸ்ட்கள்தான் ஹிட்லர், முசோ லினி போன்ற பாசிஸ்டுகளை அழித்தனர்”  என்றார். தற்போது அமெரிக்காவில் டிரம்ப் சிறுபான்மை மக்கள், கருப்பின மக்களை ஒடுக்குவ தாகவும், இந்தியாவில் கார்ப்ப ரேட் முதலாளிகள், வகுப்புவாத சக்திகள் நவபாசிசத்தை ஆதரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் கல்வியின் முக்கியத்துவம் “கம்யூனிஸ்ட் இயக்க  வரலாறு என்பது தியாகம் மட்டும் அல்ல, மறைந்த தலைவர்கள் விதைக்கப்படு கிறார்கள். நம் அரசியலை பேசு வதற்கு உதவி செய்வது தீக்கதிர். தீக்கதிரில் வரும் கட்டுரைகள், தலையங்கங்களை படிக்க வேண்டும்” என்று வாசுகி வலி யுறுத்தினார். “மார்க்சிஸ்ட் இதழில் கிராமப்புற ஏழைகளை அணி திரட்டுவது, தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவது குறித்து தலைவர்கள் எழுதும் கட்டு ரைகள் வருகின்றன. அரசியல் தத்துவார்த்த ரீதியாக பயிற்சி எடுத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் வாசிக்க வேண்டும். மாதந் தோறும் மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம் நடத்த வேண்டும்” என்றார். சந்தா நிதியளிப்பு நிகழ்ச்சியில் தருமபுரி -524, சேலம்-356,  கிருஷ்ணகிரி-50, நாமக்கல்- 100 என மொத்தம் 1030 மார்க்சிஸ்ட் சந்தாக்களுக்கான தொகை வாசுகியிடம் வழங்கப் பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன் நன்றி கூறினார்.