tamilnadu

மாவட்ட விளையாட்டு அரங்கில் தங்கும் விடுதி அமைக்கப்படுமா?

மாவட்ட விளையாட்டு அரங்கில் தங்கும் விடுதி அமைக்கப்படுமா?

விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு விருதுநகர், செப்.24- விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தங்கும் விடுதி அமைக்க வேண்டு மென விளையாட்டு வீரர்கள் பெரும் எதிர்  பார்ப்பில் உள்ளனர். விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையின் அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தால் மாவட்ட விளை யாட்டு அரங்கம் கடந்த 1985 இல் கட்டப் பட்டது. இதில், கேலரி, நீச்சல் குளம், தடகள  மைதானம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்  பந்து மற்றும் வளைகோல்பந்து மைதா னங்கள் உள்ளன. மேலும் உடற்பயிற்சி கூடம், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ் ஆகிய உள் விளையாட்டு அரங்குகளும் உள்ளன. இங்கு பயிற்சி பெற்ற பலர், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். மேலும், முதலமைச்சர் கோப்பைக் கான போட்டிகள் உட்பட சிறு, குறு வட்ட அளவிலான போட்டிகள் என தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்று வரு கின்றன. ஆனால், விளையாட்டு வீரர்கள் மற்றும்  வீராங்கனைகள் தங்குவதற்கு விடுதி வசதி தற்போது வரை செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக, மாவட்டத்தின்  கடைசி  எல்கையான சேத்தூர், நரிக்குடி, திருச்சுழி,  இராஜபாளையம், வத்ராப், கூமாப்பட்டி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத் திற்கு போட்டி நடைபெறும் காலங்களில் அதிகாலை நேரத்தில் தங்களது சொந்த ஊரிலிருந்து  புறப்பட்டு வருவதால் மிக வும் சோர்வடைந்து விடுகின்றனர். காலை நேரங்களில் உணவு  உண்ணாமல் போட்டி களில் பங்கேற்கும் நிலையும் ஏற்பட்டுள் ளது. குறிப்பாக கோடை கால விளை யாட்டுப் பயிற்சி, காலாண்டுத் தேர்வு உள்ளிட்ட விடுமுறை கால விளையாட்டு பயிற்சிக்கு வரும் பெண்கள் விடுதி இல்  லாத காரணத்தால் பெரும் சிரமப்படுகின்ற னர். அதேவேளை, விருதுநகர் மாவட்டம், தொடங்கிய பின்பு உருவாக்கப்பட்ட பல மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்குகளில் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே, விருதுநகர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் தங்கும் விடுதிக்கான  வசதி களை செய்து தர மாவட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென விளை யாட்டு வீரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.