tamilnadu

img

“பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?”

“பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?” 

கரூர், ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் கேள்வி! ஈரோடு/கரூர், ஏப். 2 - தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டி யுள்ள நிலையில், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் பரப்புரையில் ஈடுபட்டார்.  அப்போது, “தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜக வின் ‘என்டிஏ’ கூட்டணி வெற்றி  பெற்றால், அது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கே ஆபத்தாக முடியும்” என்று எச்சரித்தார். ஏப் ரல் 23 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் பாஜக - அதி முக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.     அடிமை அரசியலும்  ஊழல் புகார்களும் கரூரில் நடைபெற்ற பிரம்மா ண்ட பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழ னிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தார். “தன் மீதான ஊழல் புகார்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் இருந்து தப்பிக்க, ஒட்டு மொத்தக் கட்சியையும் பாஜக விடம் பழனிசாமி அடகு வைத்து விட்டார். மக்கள் வாக்களிக்கா மலேயே எம்எல்ஏ-க்களை  ஏலத்தில் எடுத்து முதலமைச்ச ரான கூவத்தூர் வரலாறு நமக்கு தெரியும். மீண்டும் இவரிடம் ஆட்சி சென்றால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் தில்லியிடம் அடகு வைத்துவிடுவார்” என்று முதல்வர் சாடினார். தொடர்ந்து ஈரோட்டில் தந்தை  பெரியார் பிறந்த மண்ணில் நின்ற படி பேசிய அவர், அதிமுக-வின் ஒழுக்கக் கோட்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப் பினார். “பெண்கள் பாதுகாப்பை பற்றிப் பேசுவதற்குப் பழனி சாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று காட்டமாகக் கேட்ட அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் போது குற்ற வாளிகளைக் காப்பாற்றத் துடித்தது அதிமுக அரசுதான் என்பதைச் சுட்டிக்காட்டினார். பெண்களுக்கு எதிரான குற்றங் கள் நடந்தபோது வாய்மூடி மவு னியாக இருந்த பழனிசாமி, இன்று தேர்தல் மேடைகளில் பாது காப்பு குறித்துப் பேசுவது வெற்று நாடகம் என்றார். ஓரவஞ்சனையும்  சி.ஏ.ஏ. துரோகமும் ஒன்றிய பாஜக அரசின் தமிழக  எதிர்ப்புப் போக்கை விளாசிய முதலமைச்சர், “கடந்த 11  ஆண்டுகால பாஜக ஆட்சி,  தமிழகத்திற்கு ஒரு சிறப்புத் திட்டத்தைக் கூட வழங்க வில்லை. ஒரு எம்.பி. தொகுதி யில் கூட வெற்றி பெறவில்லை என்ற விரக்தியில், மதுரை எய்ம்ஸ், சென்னை மெட்ரோ ரயில் நிதி மற்றும் பள்ளிக் கல்விக் கான நிதியை முடக்கி வைத்து  தமிழகத்தைப் பழிவாங்கு கிறார்கள்.  தமிழகத்திற்கு ‘எலக்சன் டூர்’ வரும் பிரதமரிடம் சொல்வ தற்கு ஒரு சாதனையும் இல்லை” என்று குறிப்பிட்டார். மேலும், குடியுரிமைத் திருத்த சட்டம் (CAA) நிறைவேற அதிமுக மற்றும் பாமக கட்சிகளின் ஆத ரவே காரணம் என்றும், அந்தத் துரோகத்தால் சிந்தப்பட்ட ரத்தக் கறை பழனிசாமியின் கைகளில் படிந்துள்ளதாகவும் முதல்வர் குற்றம்சாட்டினார்.  “சிறுபான்மை மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்த அதிமுக, இன்று வாக்குகளுக்காக நாடகமாடு கிறது. ஆனால் தமிழக மக்கள் எக்கா லத்திலும் பாசிச சக்திகளுடன் கைகோர்ப்பவர்களை மன்னிக்க மாட்டார்கள். அதிமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள்” என உறுதிபடத் தெரிவித்தார். நிதி நெருக்கடியும்  நிர்வாகச் சீர்குலைவும் தமிழகத்தின் நிதி நிலையை அ.தி.மு.க. அரசு எவ்வாறு சீர்குலைத்தது என்பது குறித்துப் பேசிய முதல மைச்சர், “கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் கடன் வலையில் தள்ளப்பட்டது. நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போயிருந்தது. நாங்கள் பொறுப்பேற்ற பிறகுதான் நிதி நிலையைச் சீரமைத்து, ஒவ் வொரு திட்டத்தையும் செதுக்கி வருகி றோம். ஒன்றிய அரசு தர வேண்டிய  ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தராமல் இழுத்தடித்தபோது கூட, பழனி சாமி ஒரு வார்த்தை கூடத் தட்டிக் கேட்கவில்லை. மாநில உரிமைகளைத் தாரை வார்த்துவிட்டு, இப்போது கூட்டணிக் கணக்குகளுக்காகப் பாசாங்கு செய்கிறார்” என்று சாடி னார். மாவட்டத் திட்டங்களும் புதிய வாக்குறுதிகளும் திமுக ஆட்சியின் சாதனைக ளைப் பட்டியலிட்ட முதலமைச்சர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்க ளுக்கான பிரத்யேகத் திட்டங்களைச் சுட்டிக்காட்டினார். கரூரில் காவிரி உயர்மட்டப் பாலம், புதிய பேருந்து நிலையம், மினி டைடல் பார்க் போன்ற  திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதை நினைவு கூர்ந்தார். அதே போல், ஈரோடு மக்களின் நீண்டகாலக் கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தைப் புயல் வேகத்தில் நிறை வேற்றியுள்ளதையும், மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் சிக்கய்ய  நாயக்கர் அரசுக் கல்லூரி மேம்பாடு போன்றவற்றையும் அவர் பெருமை யுடன் குறிப்பிட்டார். புதிய வாக்குறுதிகளாக, மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், ‘இல்லத் தரசி’ திட்டத்தின் கீழ் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறி வித்தார்.  மேலும், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உத வித்தொகை, அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்,  விவசாயிகளுக்கு இலவச நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் மற்றும் நெல் கொள்முதல் விலை குவிண்டா லுக்கு 3,500 ரூபாயாக உயர்வு போன்ற அதிரடித் திட்டங்களை முன்வைத்தார். வேட்பாளர்கள் அறிமுகம் தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்த முதலமைச்சர், கரூர் மாவட்டம் அர வக்குறிச்சி தொகுதியில் போட்டி யிடும் மொஞ்சனூர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் சி.கே. ராஜா, குளித்தலையில் போட்டியிடும் சூரிய னூர் சந்திரன் மற்றும் கரூர் தொகு தியில் போட்டியிடும் ஆசி.எம். தியாகராஜன் ஆகியோருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.  ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிடும் சு. முத்துசாமி, மொடக்குறிச்சியில் போட்டியிடும் செந்தில்நாதன், பெருந்துறையில் போட்டியிடும் தோப்பு வெங்கடாசலம், அந்தியூரில் போட்டியிடும் எம். சிவபாலன், கோபி செட்டிபாளையத்தில் போட்டியிடும் என். நல்லசிவம், பவானியில் போட்டி யிடும் கே.ஏ. சந்திரசேகர், காங் கேயத்தில் போட்டியிடும் சாமிநாதன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பவானிசாகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல். சுந்தரத்திற்கு கதிர் அரிவாள் சின்னத்தி லும், ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளருக்குக் கை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். “இது வெறும் தேர்தல் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தன்னுரிமையையும் அடையாளத்தையும் காக்க நடக்கும் அறப்போர். தமிழ்நாடு வன்முறைக் காடாக மாறிவிடாமல் தடுக்க உதயசூரி யன் மற்றும் கூட்டணிக் கட்சிச் சின்னங்களுக்கு வாக்களியுங்கள்” என்று கூறி தனது உணர்ச்சிமிக்க உரையை முதலமைச்சர் நிறைவு செய்தார்.