tamilnadu

உயிர்ச்சேதம் ஏற்படும் என ஆனந்தையும் சதீஷையும் எச்சரித்தோம் முதல் தகவல் அறிக்கையில் தகவல்

உயிர்ச்சேதம் ஏற்படும் என ஆனந்தையும் சதீஷையும் எச்சரித்தோம் முதல் தகவல் அறிக்கையில் தகவல்

நாமக்கல், செப்.29- நாமக்கல் பிரச்சாரத்துக்கு சனிக்கிழமை  (செப்.27) காலை 8.45 மணிக்கு அனுமதி  வழங்கப்பட்டிருந்த நிலையில், சென்னை யில் இருந்தே காலை 8.45 மணிக்குதான் விஜய் புறப்பட்டார். கூட்டத்தை அதிகரிக்க  வேண்டுமென்றே விஜய் தாமதமாக வந்த தாக நாமக்கல் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல்லில் வேண்டுமென்றே  விஜய்யின் வருகை தாமதப்படுத்தப்பட்ட தால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி யது. பல இடங்களில் நிபந்தனைகள் மீறப் பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ள வில்லை. பிரதான சாலை வழியாக தாமத மாக வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்ப டுத்தி நிபந்தனைகளை மீறினர் என தெரி விக்கப்பட்டுள்ளது. பலமுறை அறிவுறுத்தியும் எச்சரித்தும் காவல்துறை சொன்னதை கேட்கவில்லை. அசாதாரண சூழல் ஏற்பட்டு கூட்ட நெரிச லில் உயிர்சேதம், கொடுங்காயம், மூச்சுத் திணறல் ஏற்படும் என தவெக பொதுச் செய லாளர் ஆனந்த், மாவட்டச் செயலாளர்  சதீஷை எச்சரித்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. நாமக்கல்லில் காத்திருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலை யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி அரசி யல் பலத்தை காட்டும் நோக்கத்துடன் விஜய் யின் வருகை வேண்டுமென்றே 4 மணி நேரம் தாமதமாக்கப்பட்டது என குறிப்பிடப் பட்டுள்ளது. பல மணிநேரம் காத்திருந்த மக்களுக்கு போதிய தண்ணீர், உணவு, மருத்துவ வசதி  செய்யப்படாததால், அதிக கூட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தாலும் வெயிலின் தாக்கம் காரணமாகவும் மக்கள் சோர்வடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.