தமிழகத்தை ‘நம்பர் ஒன்’ மாநிலமாக உயர்த்தியுள்ளோம்: முதல்வர் பெருமிதம்!
திருவள்ளூர், ஜன. 9- ‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமையன்று, திருவள்ளூர் மாவட்டம், பாடிய நல்லூரில் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தமது ஆட்சியின் சாதனை களை விரிவாக எடுத்துரைத்தார். “7 துறைகளில் தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக வளர்ந்துள்ளோம். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி யுள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத பல திட்டங்களையும் நிறை வேற்றியுள்ளோம். நமக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுத்தது. பல்வேறு சிக்கல்கள் இருந்தும், தமிழகத்தை ‘நம்பர் ஒன்’ மாநிலமாக உயர்த்தி யுள்ளோம். பிற மாநிலங்களில் தலைநகரங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்து வரு கின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ள இரண்டாம், மூன்றாம் நிலை நகரங் களும் வளர்ந்து வருகின்றன” என்று பெருமையுடன் கூறினார். “சாதனை செய்தால், அதை முறி யடிக்க முடியாத சாதனையாக செய்வதே என் கொள்கை. திமுக ஆட்சி யில், மக்களே அவர்களின் கனவுகளை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டம். இன்னும் 30 நாட்களுக்கு அரசின் குழுவினர் மக்களைச் சந்திப்பார்கள். அப்போது தங்களின் கனவுகளை மக்கள் சொல்லலாம். அனைத்தையும் ஒருங்கிணைத்து 2030 தொலைநோக்கு பார்வையுடன் மாபெரும் திட்டத்தை அறிவிப்போம்” என்று விளக்கினார். “ஆட்சி என்பது, முதல்வராகிய எனது கனவுகளை மட்டுமல்ல, வாக் களித்த, வாக்களிக்காத அனைத்து மக்க ளின் கனவுகளையும் நிறைவேற்றுவதே ஆகும். மக்களின் கனவுகளை நிறை வேற்றினால்தான் முன்னேற்றம் கிடைக்கும். நாடே திரும்பி பார்க்கும் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக இருக் கிறோம். உங்கள் கனவுகளை நிறை வேற்றுவேன். எண்ணங்களுக்கு உரு வம் கொடுப்பேன். தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக உருவாக்குவேன். இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கின்ற தேர்தல் வாக்குறுதி” என்று முதல்வர் உறுதியளித்தார்.
