tamilnadu

img

“வாட்ஸ் அப்பை மோடி அரசு கண்காணிக்கிறதா?”

“வாட்ஸ் அப்பை மோடி அரசு கண்காணிக்கிறதா?”

உலகின் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் (WhatsApp) உள்ளது. பிரைவேசி அம்சங்கள் பலமாக  இருப்பதால் ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப் இன்றிய மையாததாக உள்ளது. இந்நிலையில், வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு விடுக்கும் தகவல் தொடர்பு விதிகளில் மோடி அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அதில், “வாட்ஸ் அப்பில் செய்யப் படும் அனைத்து அழைப்புகளும் பதிவு  செய்யப்படும். வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக ஊடக கணக்குகள் கண்காணிக்கப் படும். ஒவ்வொருவரின் செல்போன் எண்களும், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தோடு இணைக்கப்படும். எனவே அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம். அதை மீறினால்காவல்துறை நோட்டீஸ் அனுப்புவார்கள். தண்டனைக் குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்ப கம்,”இது தவறான தகவல். ஒன்றிய  அரசு இதுபோன்ற ஒரு வழிகாட்டு நெறி முறைகளை வெளியிடவில்லை” என அதில் கூறப்பட்டுள்ளது.