இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்க வேண்டும் சாமியார் யதி நர்சிங்கானந்த் கிரி அடாவடி
காசியாபாத் பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலத் தின் காசியாபாத்தில் உள்ளது தாஸ்னா தேவி கோவில். இந்த கோவிலின் தலைமை பூசாரி யாக இருப்பவர் வெறுப்புப் பேச்சுக்கு பெயர் பெற்ற யதி நர்சிங்கானந்த் கிரி. ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு நெருக்கமான இவர் அகில பாரதிய அகாரா பரிஷத் என்ற இந்துத்துவா அமைப்பின் தலைமை சாமியாராகவும் உள் ளார். அதேபோல மதரீதியான சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி இந்து - முஸ்லிம் மக்களி டையே மோதலை தூண்டுவதிலும் யதி பெயர் பெற்றவர். இந்நிலையில், இந்துக்களை பாதுகாக்க ஐஎஸ்ஐஎஸ் பயங்க ரவாத அமைப்பை போன்று தற்கொலைப் படை உருவாக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் யதி நர்சிங்கானந்த் கிரி பேசியுள்ளார். சமூக வலைத் தளங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,“வங்கதேசத்தில் இந்துக்களின் நிலைமையை பாருங்கள். மோசமாக உள்ளது. அதனால் இந்தியாவில் இந்துக்க ளைப் பாதுகாக்க பஜ்ரங் தளம், விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) போன்ற சாதாரண அமைப்புகள் மட்டும் போதாது. ஐஎஸ்ஐஎஸ் (உலகளவிலான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு) பயங்கர வாத அமைப்பை முன்மாதிரியா கக் கொண்டு ஒரு தற்கொலைப் படை அமைப்பை இந்துக்கள் உரு வாக்க வேண்டும். இந்த தற் கொலைப் படைகளை அமைத்து இந்துக்கள் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை விட்டு வெளியேறி, அந்த தற்கொலைப் படை அமைப்பில் இணைய வேண்டும்” என அடாவடியாகப் பேசியுள்ளார். மேலும் இந்து ரக்ஷா தளம் தலைவர் பிங்கி சவுத்ரி மற்றும் அவரது தொண்டர்கள் சமீபத்தில் வாள்களை விநியோகித்ததையும் (காசியபாத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில்) அவர் ஆதரித்தார். யதியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வன்முறையைத் தூண்டுவதாகவும், சட்டவிரோத மான முறையில் பேசப்படுவதா கவும் கூறி பல்வேறு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரு கிறது. ஆனால் உத்தரப்பிரதேச பாஜக அரசு சாதாரண வழக்குப் பதிவு கூட மேற்கொள்ளாமல் அமைதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
