states

img

சிறுமி கும்பல் பாலியல் பலாத்காரம் திரிணாமுல் நிர்வாகி  உட்பட 2 பேர் கைது

சிறுமி கும்பல் பாலியல் பலாத்காரம் திரிணாமுல் நிர்வாகி  உட்பட 2 பேர் கைது

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டம் உத்தரபிரா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அருகில் உள்ள பகுதிக்குச் சென்றுள்ளார். காதலனை சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.  அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகியான திபன்கர் அதிகாரி அங்கு வந்துள்ளார். இவர் சிறுமியின் காதல னின் நண்பர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு ஒரு தொழிற்சா லையில் வைத்து சிறுமியை அவரது காதலனும், திபன்கரும் சேர்ந்து கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி திபன்கர், சிறுமியின் காதலன் ஆகியோரை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.