காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகளை தன்னுடைய தனிப்படைகளாக பாஜக பயன்படுத்தி வருகிறது. இது ஜனநாயகத்துக்கு கேடு.
ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள இந்து கல்லூரிக்கு வெளியே, பர்ஹாத் அலி என்ற முஸ்லிம் மாணவர் தீவைத்துக் கொளுத்தப்பட்டார். இந்தச் செயலை அவருடைய சக கல்லூரி மாணவர்களான ஆருஷ் சிங், தீபக் குமார் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அம்மாநில காவல்துறை, இது ஒரு “பிராங்க்” (வேடிக்கைக்காகச் செய்யப்பட்டது) என்று தெரிவித்துள்ளது. இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்?
வடகிழக்கு இந்திய ஊடக நிபுணர் அங்குஸ்மான் சவுத்ரி
கடந்த 10 ஆண்டுகால சங் பரிவாரங்களின் நச்சுப் பிரச்சாரத்தின் காரணமாக, மேற்கு வங்கத்தில் ஒருவரை “பெங்காலி முஸ்லிம்” என்று கூறினால், அவர்களை “வங்கதேசத்தவர்” என்று உடனடியாக அடையாளப்படுத்தும் நிலைமை உருவாகியுள்ளது. இது மோசமான பாதை ஆகும்.
யூடியூபர் பிரதீப் சின்கா
ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் பதற்றத்தில் உள்ளனர். அதனால் தான் வெறுப்புப் பேச்சு அதிகமாகி வருகிறது. கடந்த வாரம் உ.பி.,யில் இந்துத்துவா கும்பல் ஆயுதங்களை விநியோகித்தது. இந்த வாரம் தற்கொலைப் படைகளையும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளையும் உருவாக்க வேண்டும் என சாமியார் யதி நர்சிங்கானந்த் அழைப்பு விடுத்துள்ளார். இது பதற்றம், அழிவின் வெளிப்பாடு.
