அரசு டெண்டர்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுக ளைத் தளர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2020ஆம் ஆண்டு கல்வான் சம்பவத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகளால் சீன உதிரி பாகங்கள், தொழில்நுட்பக் கரு விகளின் தட்டுப்பாட்டால் பல திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.
