states

ராமர் கோவிலைச் சுற்றி 15 கி.மீ., சுற்றளவிற்கு இறைச்சி விற்கக் கூடாதாம்!

ராமர் கோவிலைச் சுற்றி 15 கி.மீ., சுற்றளவிற்கு இறைச்சி விற்கக் கூடாதாம்!

அயோத்தி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி யில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப் பட்டது. இந்த கோவிலை பிரதமர் மோடி திறந்து  வைத்தார். இந்நிலையில், இந்த ராமர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோ கத்திற்கு அயோத்தி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”அயோத்தி ராமர் கோவிலைச் சுற்றி 15 கி.மீ., தொலை வில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இந்தப் பகுதிக்குள் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது. அதே போல அசைவ உணவுகளை டெலி வரி செய்யக் கூடாது. இதனை அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்க ளின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அயோத்தி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. முன்பு அயோத்தியின் பஞ்சகோசி, கோசி பரிக்ரமா எல்லைகளுக்குள் மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் தடை 15 கி.மீ சுற்றளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலைச் சுற்றி 15 கி.மீ., சுற்றள விற்கு இறைச்சி விற்கக் கூடாது என்ற  உத்தரவு மக்களின் தனிமனித உணவு உரிமை யில் தலையிடும் செயல் ஆகும். மேலும் உணவு விநியோகத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் என நாடு முழுவதும் விமர்சனங்கள், கண்ட னங்கள் குவிந்து வருகின்றன.