states

img

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை கண்டனம்

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை கண்டனம்

ஈரானுக்கு எதிராக தாக்கு தல் நடத்தி வரும் அமெ ரிக்கா - இஸ்ரேலுக்கு ஐக் கிய நாடுகள் சபையின் தலைவர் அந்தோணியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும்  கூறுகையில்,”மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ராணுவ மோதல் போக்கை வன்மையாகக் கண்டிக் கிறேன். ஈரானுக்கு எதிராக அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களும், அதனைத் தொட ர்ந்து ஈரான் நடத்தியுள்ள தாக்கு தல்களும் சர்வதேச பாதுகாப்பைக்  குலைக்கின்றன. உலகின் மிகவும்  கொந்தளிப்பான இந்தப் பிராந்தி யத்தில், எவராலும் கட்டுப்படுத்த முடியாத தொடர்ச்சியான அசம்பா விதங்களை உருவாக்கும் அபா யத்தை தாக்குதல் சம்பவங்கள் கொண்டுள்ளன. நிலையான அமை தியை, முறையான பேச்சுவார்த்தை  மற்றும் கலந்தாலோசனைகள் உள்  ளிட்ட அமைதி வழிகளால் மட்டுமே அடைய முடியும். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஐக்கிய நாடுகள்  சபையின்  சாசனம் அடிப்படை ஆதா ரமாகத் திகழ்கிறது” என்று அவர் கூறினார். மேலும்  ஐநா பாதுகாப்பு கவுன்  சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய  பொதுச் செயலாளர் குட்டரெஸ், “மத்திய கிழக்கில் மோதல் தீவிர மடைவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்கு தல்கள் ஐநா சாசனம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களை மீறுவதாக உளள்து. அதே வேளையில் பஹ்  ரைன், இராக், ஜோர்டான், குவைத்,  கத்தார், சவூதி அரேபியா மற்றும்  ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடு களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும்  வகையில் ஈரான் நடத்திய பதி லடித் தாக்குதல்களும் கண்டிக்கத் தது தான்” என அவர் பேசினார். அமெரிக்கா - இஸ்ரேல் போர்க் குற்றவாளிகள் முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத் தில், ஈரான் மீது நடத்திய தாக்கு தல்களை அமெரிக்காவும் இஸ்ரே லும் நியாயப்படுத்திப் பேசின.  அதே நேரத்தில், இத்தாக்குதலில் ஏற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு களை ஒரு “போர்க்குற்றம்” என்று  ஈரான் சாடியது. சீனா கடும் கண்டனம் ஈரானின் உயர் தலைவர் அய துல்லா அலி காமேனியை அமெ ரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கொன்றதற்கு சீனா கடும் கண்ட னத்தை தெரிவித்தது. இதுதொடர்  பாக சீன வெளியுறவு அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த  படுகொலைச் சம்பவம், ஈரா னின் இறையாண்மை மற்றும் பாது காப்பை கடுமையாக மீறும் செயலா கும். இது ஐநா சாசனத்தின் நோக்  கங்கள் மற்றும் கொள்கைகளை யும், சர்வதேச உறவுகளின் அடிப் படை நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் செயலாக கருதப்படுகிறது. சீனா இதனை உறுதியாக எதிர்ப்பதுடன், கடுமை யாகக் கண்டிக்கிறது.ராணுவ நட வடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என அதில் கூறப்  பட்டுள்ளது.