tamilnadu

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கடலூர், அக்.10- சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டதால் சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்டமான 119 அடியில் தற்போது 114.15 அடியாக குறைந்துள்ளது.  நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையின் காரண மாக, சாத்தனூர் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை(அக்.10) முதல் வினா டிக்கு 4 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டது. மேலும், நீர்பிடிப்பு பகுதி களில் பெய்யும் மழையின் அளவினை பொருத்து சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை பொருத்தும், சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே, தென்பெண்ணையாற்றின் இருகரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றை கடக்க கூடாது, குளிப்பதற்காகவும் துணிதுவைப்ப தற்காகவும் ஆற்றில் இறங்கக் கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றில் குளிப்பதற்கு அனுமதிக்க கூடாது. இளைஞர்கள் ஆற்றில் இறங்கி சுயபுகைப்படம் எடுப்பது போன்ற செயல்க ளில் ஈடுபட கூடாது எனவும் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாது காப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இத்துடன், அரசு துறை சார்ந்த அலு வலர்கள் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீர் குறித்த தகவல்களை கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து தகுந்த பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.