tamilnadu

img

விவசாய தொழிலாளர் நல சங்க விண்ணப்பத்தில் திருத்தம் செய்க விதொச புதுச்சேரியில் வலியுறுத்தல்

விவசாய தொழிலாளர் நல சங்க விண்ணப்பத்தில் திருத்தம் செய்க விதொச புதுச்சேரியில் வலியுறுத்தல்

புதுச்சேரி, அக்.15- விவசாய தொழிலாளர் நல சங்க விண்ணப்ப படி வத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை யில் நிர்வாகிகள் அரி தாஸ், செல்வராசு, சக்தி வேல் ஆகியோர் விவ சாயத்துறையின் பாகூர் கிளை அதிகாரி பர மானந்தம் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். மனுவில், புதுச்சேரி அரசு சார்பில் விவசாய தொழிலாளர்களுக்கு நல சங்கம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்ப படிவம் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கேள்வி களில் தொழிலாளர் வேலை செய்யும் நில உரிமை யாளர் பெயர் மற்றும் முகவரி, சாகுபடி செய்யும் பரப்பளவு பற்றிய விவரம், எத்தனை ஆண்டுகளாக விவசாய தொழிலாளி வேலை செய்கிறார் என்ற விவரம் மற்றும் விவ சாயியின் கையொப்பம் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகள் பொருத்தமற்றவை என்றும், ஆண்டான் அடிமைச் சமுதாயத்தை அரசே உருவாக்குவது போன்று தோன்றுவதால் இந்த கேள்விகளை விண்ணப்ப த்தில் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விவ சாய நிலங்கள் குறைந்து விட்டதாலும், விவசாயிகள் பயிரிடும் பரப்பளவும் குறைந்துவிட்டதாலும், தற்போது நடைபெறும் கொஞ்சம் வேலைகளிலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாலும் விவசாய தொழிலாளர்க ளுக்கு விவசாய நிலத்தில் வேலை கிடைப்பது கனவாகிவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 108 கிராம பஞ்சாயத்துகளிலும் விவசாய தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை செய்து வருகின்றனர். எனவே இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு உறுப்பி னர் படிவத்தில் மாற்றம் செய்து நலச்சங்கத்தில் உறுப்பினராக விவசாய தொழிலாளர்களை அலை கழிக்காமல் சேர்க்க வேண்டும் என்றும், புதுச்சேரியில் தாவரவியல் பூங்காவில் மூடப்பட்டுள்ள விவசாய தொழிலாளர் நல சங்க அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.