திருச்சி புறநகரில் எழுச்சிமிகு மறியல்
மக்கள், தொழிலாளர், விவசாயிகள் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதனொரு பகுதியாக திருச்சி புறநகர் மாவட்டங்களில் நடைபெற்ற மறியல், ஆர்ப்பாட்டங்களில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி புறநகர் மாவட்டத்தில் 13 மையங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 450 பெண்கள் உள்பட 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.