tamilnadu

img

முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட பகுதியில் புதையலை தேடும் சமூக விரோதிகள் ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட பகுதியில் புதையலை தேடும் சமூக விரோதிகள்

ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

தஞ்சாவூர்,  ஜூலை 4 - தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டியில் உள்ள  “தாழவாரி” என்னும் பகுதி யில், பழங்காலத் தமிழ கத்தில் இறந்தவர்களின் உடல்களை மண்ணில்  புதைக்கப் பயன்படுத்தப் பட்ட புதைகலன்களாகிய முதுமக்கள் தாழியை ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்ட றிந்தனர். இந்நிலையில், சமூக விரோதிகள் புதையல் இருப்பதாக, முதுமக்கள் தாழி களை உடைத்து சேதப்படுத்தி வருகின்ற னர். இதுகுறித்து, தஞ்சாவூர் ஆட்சியர் அலு வலகத்தில் பாளையப்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், “பாளையப்பட்டியில் 54  ஏக்கர் பரப்பில், தொன்மையான முதுமக்கள்  தாழிகள் இருந்துள்ளன. இவற்றில் மண்ண ரிப்பினால் சுமார் 25-க்கும் மேற்பட்ட தாழி கள் சிதைந்து காணப்பட்டது. மேலும் கருப்பு, சிவப்பு பானை ஓடு களும், இரும்பாலான பொருட்களின் எச்சங் களும், இரும்பை உருக்கியது, எஞ்சிய இரும்புக் கழிவுகளும், காலத்தின் தொன்மை யைப் பறைசாற்றுவனவாகக் காணக் கிடக்கின்றன. வெளியே தெரியாமல் மண்ணுள்  புதையுண்டு கிடக்கக் கூடிய தாழிகளைக் கண்டறிந்திடவும், இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பகுதியையும் கண்டறிய வேண்டும். தமிழர் நாகரீகம் அறிவியல் பூர்வமானது மற்றும் காலத் தால் முந்தையது என்பதை நிறுவிட இவ்விடத் தில் ஆய்வு மேற்கொள்வது மிக அவசிய மாகும். இத்தகைய அகழாய்வு மூலம், சோழ நாட்டு மக்களின் வாழ்வியலையும், பண்பாட் டையும் வெளிக் கொண்டு வர முடியும்.  ஆய்வாளர்களால் சமீபத்தில் கண்டறியப் பட்ட பகுதிகளில் பொருட்கள் சிதறி, பாது காப்பின்றி கிடக்கின்றன. சமூக விரோதிகள்  பலர் புதையல் இருப்பதாக கூறி, தொல் பொருட்களை களவாடிச் செல்கின்றனர்.  எனவே, முதுமக்கள் தாழிகள் கண்ட றியப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதால், வரலாற்று முக்கியத்துவம் கருதி,  அரசு இந்த இடத்தை பாதுகாத்து, பரா மரிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.