30 மணி நேரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்!
சென்னை: கரூரில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இதுவரை பலியாகி யுள்ளனர். இந்த சம்பவத்தன்று கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந் தார். இதனிடையே கடந்த 36 மணி நேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகி கள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார். இந்நிலை யில், திங்களன்று காலை 10 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் தனது பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ சென்ற நிலையில், கரூர் செல்கிறாரா என பரபரப்பு ஏற்பட் டது. எனினும் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். பட்டினப்பாக்கம் வீட்டிற்கு ஒன்றிய அரசின் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடை யில், துக்ளக் ஆசிரியர், பாஜக பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் விஜய் சந்தித்ததாக தகவல்கள் வெளி யாகின. ஆனால், ஆடிட்டர் குருமுர்த்தி இதை மறுத்துள்ளார்.
கரூரில் நிர்மலா சீதாராமன் ஆய்வு
கரூர்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று (செப்.29) கரூர் வந்தடைந்தார். அவர் வேலுச் சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவர்களையும் நிர்மலா சீதா ராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒன்றிய இணைய மைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிபிஐ விசாரிக்கக் கோரி ஆதவ் அர்ஜுனா மனு
சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் நடந்த சம்ப வங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சாரத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப் பிட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்கு காவல் துறை எந்த தடையும் விதிக்கக் கூடாது என்றும்” குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
விசாரணை அதிகாரி நியமனம்
கரூர்: கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரித்து வரு கின்றனர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் விசா ரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரி யாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். டிஎஸ்பி ரேங்கிற்கு மேல் உள்ள ஏடிஎஸ்பி ரேங் கொண்ட அதிகாரியை நியமித்து கரூர் எஸ்.பி., உத்தர விட்டுள்ளார்.
அக்.3-இல் விசாரணை
மதுரை: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விஜய் தரப்பினர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இவ்வழக் கின் விசாரணை அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. தவெக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அறிவழகன் தலை மையிலான வழக்கறிஞர்கள் அணியினர் திங்களன்று இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தசரா பண்டிகை விடுமுறை காலம் என்பதால் ஏற்கனவே அறிவித்த படி மனுக்களை செவ்வாயன்று தாக்கல் செய்ய வேண்டும். அக்டோபர் 3 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதி மன்ற பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்
சென்னை: கரூர் நிகழ்வைப் போன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கட்டுப் பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “கூட்ட நெரிசல் உயிரிழப்பை தடுப்பதற்கான யோச னையை தலைமைச் செயலாளரிடம் கூறி யிருக்கிறேன். எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் ஏற்று நடக்க வேண்டும்” என்றும் தெரிவித் துள்ளார்.
சுற்றுப் பயணத் திட்ட தேதி மாற்றம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற நோக்கத்துடன் சட்டமன்றத் தொகுதி வாரி யாக தொடர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்படு கிறது. 5 ஆம் கட்ட சுற்றுப் பயணத்தை செப்.29, 30, அக்.4 ஆகிய தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த நிலை யில், திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே அக்.2, 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த கரடி
நீலகிரி: உதகை நக ரில் கடந்த சில நாட்களாக தாவரவியல் பூங்கா, வண்டி சோலை பகுதி களில் கரடி சுற்றித் திரி கிறது. இந்நிலையில், உத கையில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்துக்குள் கரடி நுழைந்ததால் ஊழி யர்கள் அச்சமடைந்தனர்.
துப்பாக்கி முனையில் 12 மீனவர்கள் கைது
காரைக்கால்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு, காரைக்கால் மீனவர் கள் 12 பேர் துப்பாக்கி முனை யில் கைது செய்யப்பட்டுள்ள னர். இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்ற 12 மீனவர் களை விடுவிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
நாளை முதல் விரைவு தபால் மட்டுமே! திருத்தப்பட்ட கட்டணம் அறிவிப்பு
சென்னை, செப்.29- தபால் துறையில் செயல்பட்டு வந்த பதிவுத் தபால் சேவை நிறுத்தப்பட்டு, விரை வுத் தபாலுடன் இணைக்கப்பட்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் விரைவுத் தபால் கட்டணம் மாற்றி யமைக்கப்பட்டுள்ளது. ஆவணங்களுக்கு அதிகபட்சம் 50 கிரா முக்கு உள்ளூருக்கு 19 ரூபாய், 200 கிலோ மீட்டர் வரை 47 ரூபாய், 201 கிலோமீட்டரில் இருந்து 2,000 கிலோமீட்டர் வரை 47 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 51 கிராமில் இருந்து 250 கிராம் வரை உள்ளூரில் 24 ரூபாய், 200 கிலோமீட்டர் வரை 59 ரூபாய், 201 கிலோமீட்டரில் இருந்து 500 கிலோமீட்டர் வரை 63 ரூபாய், 501 கிலோ மீட்டரில் இருந்து 1,000 கிலோமீட்டர் வரை 68 ரூபாய், 1,001 கிலோமீட்டரில் இருந்து 2,000 கிலோமீட்டர் வரை 72 ரூபாய், 2,000 கிலோ மீட்டருக்கு அப்பால் 77 ரூபாய் என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. 251 கிராமில் இருந்து 500 கிராம் வரை உள்ளூரில் 28 ரூபாய், 200 கிலோ மீட்டருக்குள் 70 ரூபாய், 201 கிலோ மீட்டரில் இருந்து 500 கிலோ மீட்டர் வரை 75 ரூபாய், 501 கிலோ மீட்டரில் இருந்து 1,000 கிலோ மீட்டர் வரை 82 ரூபாய், 1,001 கிலோ மீட்டரில் இருந்து 2,000 கிலோ மீட்டர் வரை 86 ரூபாய், 2,000 கிலோ மீட்டருக்கு அப்பால் 93 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரியவரிடம் அல்லது அவரால் நியமிக்கப் பட்ட நபரிடம் தபால் சேர்க்கவும், உரியவர்கள் வீட்டில் இல்லாத பட்சத்தில் தபால் பெற உரிய வரை நியமிக்காத நிலையில் ஓ.டி.பி. பெற்றுத் தபால்களை சேர்க்கவும் தனித்தனி யாக 5 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்ப டும். திருத்தப்பட்ட கட்டணங்கள் அக்டோ பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரு கின்றன என தபால்துறை அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து செங்கோட்டை, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: ஆயுத பூஜையையொட்டி சென்னை - எழும்பூர் - திருவனந்தபுரம் இடையே செவ்வாயன்று (செப்.30) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண். 06075 சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.15 மணிக்குப் புறப்பட்டு அக்டோபர் 1 பிற்பகல் 2.05-க்கு திரு வனந்தபுரத்தை அடையும். இந்த ரயில் பெரம்பூர், திரு வள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், கோட்டயம், கொல்லம் வழியாகச் செல்லும். அதேபோல், திருவனந்தபுரத் தில் இருந்து அக்டோபர் 5 மாலை 4.30 மணிக்குப் புறப்படும் ரயில் எண். 06076, மறுநாள் அக்.6 அன்று காலை 10.30 மணிக்கு சென்னையை வந்தடையும். சென்னை - தாம்பரம் - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வண்டி எண்.06013) தாம்பரத்தில் இருந்து செப்.30 அன்று மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு அக்டோபர் 1 அன்று அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையைச் சென்ற டையும். தாம்பரம், செங்கல்பட்டு, விருத்தாச்சலம், அரிய லூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாகச் செல்லும். அதேநேரத் தில் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு ரயில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
திடீர் சந்திப்பு
விழுப்புரம்: பாமக தலைவர் மரு.ராமதாசுக் கும், அவரது மகன் அன்பு மணிக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. கட்சி யில் அதிகாரம் மற்றும் யாருடன் கூட்டணி என்ப தில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்ப திலும் இரு தரப்புக்கும் போட்டி வலுத்து வருகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திங்க ளன்று பாமக தலைவர் ராம தாசை தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார்.
செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: மக்க ளவை எதிர்கட்சித் தலை வர் ராகுல் காந்திக்கு தொலைக்காட்சி நேரலை யில் கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிண்டூ மகாதேவின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். இதை சாதா ரண வாக்குவாதமோ அல்லது உணர்ச்சி மிகை பேச்சாகவோ கருதக் கூடாது எனவும், திட்டமிட்ட வெளிப்படையான கொலை மிரட்டல் என்றும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அச்சு றுத்தலாலும் மிரட்டலா லும் காங்கிரஸ் கட்சியும் இந்திய குடிமக்களும் சட்டப் பூர்வ ஜனநாயகப் போராட் டத்தில் இருந்து ஒரு அங்குலமும் பின்வாங்க மாட்டார்கள் என்று ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.