சிபிஎம் - சிபிஐ தலைவர்களைச் சந்தித்தார்
துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
புதுதில்லி, ஆக. 27 - இந்திய குடியரசுத் தலை வர் பதவிக்கு செப்டம்பர் 9 அன்று தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்த லில், இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுவேட்பாள ராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி நிறுத்தப் பட்டுள்ளார். வேட்புமனுத் தாக்கலை தொடர்ந்து, அவர், நாடு முழு வதும் அரசியல் தலைவர் களைச் சந்தித்து தனக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார். ஆகஸ்ட் 21 சென்னை வந்த அவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களைச் சந்தித் தார். ஆகஸ்ட் 22 அன்று லக்னோவில் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். அந்த வகையில், பி. சுதர்சன் ரெட்டி, புதன்கிழமையன்று புதுதில்லியில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பள்ளி செயல்படும் சுர்ஜித் பவ னிற்கு வந்த பி. சுதர்சன் ரெட்டியை, கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியும், சிபிஐ-யின் தேசிய அலுவலகமான அஜாய் பவ னிற்கு வந்த பி. சுதர்சன் ரெட்டியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜாவும் வரவேற்றனர். சுதர்சன் ரெட்டியுடன், தெலுங்கானா காங்கிரஸ் எம்.பி.க்களின் ஒருங்கிணை ப்பாளர் டாக்டர் மல்லு ரவி எம்.பி. உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.