tamilnadu

img

அமெரிக்க அபராத வரி: தமிழக தொழில்களுக்கு பெரும் சவால் திருப்பூர், ஓசூர் தொழிற்சாலைகளில் கடும் பாதிப்பு செப்.5-இல் மாநிலம் தழுவிய போராட்டம்

அமெரிக்க அபராத வரி: தமிழக தொழில்களுக்கு பெரும் சவால் திருப்பூர், ஓசூர் தொழிற்சாலைகளில் கடும் பாதிப்பு செப்.5-இல் மாநிலம் தழுவிய போராட்டம்

பெ.சண்முகம் பேட்டி கிருஷ்ணகிரி, ஆக. 30- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு சனிக் கிழமை வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா ஆகஸ்ட் 27ஆம்  தேதி முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத அபராத வரி  விதித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்  என்ற காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பில் பேசி  தீர்வு காணாமல் அடாவடித்தனமாக செயல்படு வது கண்டனத்துக்குரியது” என்றார். ஓசூரில் உள்ள கனரக மோட்டார், எலக்ட்ரிக் கல், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை களுக்கும் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிலுக் கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. “டிரம்ப்பும் நானும் நெருங்கிய நண்பர்கள்” என்ற பிரதமர் மோடியின் நட்பு இந்தியாவுக்கு எவ்வித பய னும் அளிக்கவில்லை என்றும் விமர்சித்தார். தேர்தல் வெற்றி நம்பிக்கை மதச்சார்பற்ற திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி  பெற்ற அதே கூட்டணி வரும் தேர்தலிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என பல்வேறு திசைகளில் சிதறியுள்ளதால் அவர் களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றார். அரசு மருத்துவர் பணி மாறுதல் அரசு மருத்துவர்களின் சட்டப்பூர்வ போராட்டக் குழுத் தலைவர் டாக்டர் பெருமாளை பழிவாங்கும்  நடவடிக்கையாக சென்னையில் இருந்து நாகப் பட்டினம் மருத்துவமனைக்கு பணி மாறுதல் செய்துள்ளது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத் தும். மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு மருத்து வர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொண்டது எந்தவித குற்றமும் இல்லை. பழிவாங்கல் இட மாற்ற உத்தரவையும் 17-பி குற்றப் பத்திரிகை யையும் அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தினார். செப்டம்பர் 1 முதல் நெல் குவிண்டலுக்கு ரூ.2,500 என்ற தமிழக அரசின் அறிவிப்பை வர வேற்றாலும், உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரண மாக ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தார். கெலவரப்பள்ளி அணை யில் இருந்து வரும் மாசடைந்த நீர் பிரச்சனைக்கு  தீர்வு காணவும், மாம்பழ விவசாயிகளுக்கு கிலோ வுக்கு குறைந்தபட்சம் ரூ.12 விலை உறுதி செய்ய வும் கோரினார். மாநாட்டு நிதி முன்னதாக, ஓசூரில் நடைபெறவுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டிற்காக அனைத்து வட்டக் குழுக்கள் வசூ லித்த ரூ.10 லட்சம் நிதி, அவரிடம் வழங்கப்பட்டது. இந்த செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செய லாளர் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.சேகர், நஞ்சுண்டன், மகாலிங்கம், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பிரகாஷ், சி.பி.ஜெய ராமன், நடராஜன், லெனின் முருகன், மூத்த தலை வர்கள் பி.நாகராஜ ரெட்டி, டி.எஸ்.பாண்டியன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், தலைவர் புருஷோத்தம ரெட்டி, ஒன்றியச் செய லாளர்கள் தேவராஜன், ஆர்.கே.தேவராஜ், ராஜா  நாகேஷ் பாபு, சாமு பெரியசாமி சபாபதி ஆகி யோர் கலந்து கொண்டனர்.