tamilnadu

img

கரூர் ஜவுளி ஏற்றுமதியை நாசமாக்கும் அமெரிக்கா இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் ஜவுளி ஏற்றுமதியை நாசமாக்கும் அமெரிக்கா இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப். 6-  இந்தியா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடியான 50 சதவிகித வரிவிதிப்பை கண்டித்தும், நாட்டின் சுயசார்பு, ஏற்றுமதி தொழில்கள், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை திருச்சி பீமநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் சிபிஎம் மாநகர் கோவி. வெற்றிச்செல்வம், புறநகர் கே.சிவராஜ், சிபிஐ எஸ்.சிவா, சி.பி.ஐ.எம்.எல். கே. ஞானதேசிகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ். ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன், சிபிஐ மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், சிபிஐ எம்.எல். பாலசுந்தரம், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் க.சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  இதில் இடதுசாரிக் கட்சிகளின் மாவட்டக் குழு, பகுதிக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கரூர்  கரூர் ஜவுளி ஏற்றுமதி தொழிலை நாசமாக்கும் வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம் எல் ) கட்சிகளின் மாவட்டக் குழு சார்பில், கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்டச் செயலாளர் கே. கலாராணி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, சிபிஐ (எம் எல்) மாவட்டச் செயலாளர் மு.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி சிறப்புரையாற்றினார். சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் என்.ரவி, சிபிஐ (எம் எல்) மத்தியக் குழு உறுப்பினர் அ.சந்திரமோகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கே.என். நாட்ராயன், சிபிஐ(எம் எல்) மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் எம்.பால்ராஜ் மற்றும் அனைத்து கட்சிகளின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.