tamilnadu

img

கிராம ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதை கைவிட வலியுறுத்தல்

கிராம ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதை கைவிட வலியுறுத்தல் 

திருச்சிராப்பள்ளி, ஆக. 19-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய பேரவை, நொச்சியத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் ராணி தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் கோமதி, மாவட்ட துணைச் செயலாளர் விசாலாட்சி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.சுப்பிரமணியன், ஒன்றியப் பொருளாளர் என். சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன், சிஐடியு முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் தலைமுறை, தலைமுறையாக வீடுகட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கிராம ஊராட்சியை திருச்சி மாநகராட்சியோடு இணைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய தலைவராக ச. தெய்வக்கன்னி, துணைத் தலைவராக புஷ்பவள்ளி, செயலாளராக எம்.ராணி, துணைச் செயலாளராக மருதாம்பாள், பொருளாளராக கோமதி உட்பட 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.