தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம்
தஞ்சாவூர், அக்.24 - தமிழகத்தில் தனியார் பல்கலைக் கழக சட்டத்திருத்த மசோதாவுக்கு எதி ராக மாநிலம் முழுவதும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கம் சார்பில், கருப்புச் சட்டை அணிந்து வியாழக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 17.10.2025 அன்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட “தனியார் பல்கலைக்கழக சட்டம் - 2019” திருத்த மசோதா, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையில், பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதாக சங்கங்கள் குற்றம் சாட்டி யுள்ளன. உயர்கல்வி, பணக்காரர் களுக்கு மட்டுமே மையப்படுத்தப்படும் அபாயத்தை இந்தச் சட்டம் உரு வாக்கும் என்றும், சமூக நீதி பாதிக்கப் படும் என்றும் கண்டனம் தெரிவித்துள் ளனர். அரசு உதவி பெறும் கல்லூரி பேரா சிரியர்களின் பணி பாதுகாப்பும் கேள்விக் குறியாகும் சூழலை இந்த மசோதா உருவாக்குவதாக சங்கத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர். மாணவர்கள், பெற் றோர், தொழிலாளர் மற்றும் ஆசிரி யர்களின் நலனுக்கு எதிரான இந்தச் சட்டத்தை ஆரம்பத்திலிருந்தே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வியாழக் கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கருப்பு ஆடை அணிந்து பணிக்குச் செல்லுதல், வாயில் முழக்கப் போராட்டம் எனப் பல்வேறு வடிவங் களில் எதிர்ப்பு பதிவானது. தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்ப ட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நுழை வாயிலில், வியாழனன்று காலை 9 மணிக்கு கருப்புச் சட்டை அணிந்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி கிளைத் தலைவர் முகமது அலி தலைமை வகித்தார். அரசு உதவி பெறும் கல்லூ ரிகளின் பணியாளர் சங்க கிளைத் தலை வர் கார்த்திகேயன் முன்னிலை வகித் தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் பேராசிரியர் செய் யது அகமது கபீர், 6ஆவது மண்டல செய லாளர் ஆயிஷா மரியம், அலுவலர் சங்க மாநில இணைச் செயலாளர் காதர் முகைதீன், வெங்கடேஷ் உள்ளிட்ட இரு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
