tamilnadu

இந்தியா வருகிறார் உக்ரைன் ஜனாதிபதி

இந்தியா வருகிறார் உக்ரைன் ஜனாதிபதி

புதுதில்லி, ஆகஸ்ட் 24- உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போர் பதற்றத்துக்கு இடையே உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர  உள்ளதாக, இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும். ஜெலென்ஸ்கியின் பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரு கிறோம். இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்து வார். போர் நிலவரம், போரை நிறுத்து வது குறித்தும் ஆலோசனை நடத்து வார்கள்” என உக்ரைன் தூதர் போலிஷ்சுக் கூறியுள்ளார்.