tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

மெட்ரோ ரயில்  3 வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

சென்னை, அக். 14- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2, வழித்தடம் 3-ல் பவானி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாகப் பணியை முடித்து ஆர்.கே.சாலை நிலையத்தை வந்தடைந்தது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் பவானி ராயப்பேட்டை நிலையத்தி லிருந்து ஆர்.கே.சாலை நிலையம் வரை 910 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்தது. இது ராயப் பேட்டை நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் பாலம் மற்றும் ராயப்பேட்டை கண் மருத்துவமனையின் பாரம்பரியக் கட்டடம் ஆகியவற்றைக் கடந்து வந்துள்ளது. மண்ணின் மேற்பரப்புக்கும் சுரங்கப் பாதைக்கும் இடையே 8 முதல் 14 மீட்டர் வரை தூரம் உள்ளது. கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மேலும் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தற்போது மந்தைவெளி பகுதியை வந்தடைந்துள்ளன. இவை இம்மாதத்திலும் அடுத்த மாதத்திலும் பணியை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சு னன், பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி, எம்.ரவிச்சந்திரன், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஜெய ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மின் விபத்து: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை, அக்.14- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் பெருங்களத்தூர் பகுதி மின் கடத்தியதில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் திங்களன்று(அக்.13) ஈடுபட்டனர். இறுதியாக பணியை முடித்து திரும்பி வரும் பொழுது, ஸ்பேனர், போல்ட், கிளாம்ப் போன்றவற்றை விட்டு விட்ட தாகவும் அதை எடுத்து வர சொல்லி அதி காரிகள் கேங்மேன் ஆனஸ்ட்ராஜ் என்ப வரை மீண்டும் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் மீண்டும் அந்த தொழி லாளி சென்றபோது, அவரை மின்சாரம் தாக்கியது. பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை பிறகு 50% மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேங்மேன் ஆனஸ்ட்ராஜ் என்ற தொழிலாளியை நீண்ட நேரம் வரை சம்மந்தப்பட்ட எந்த ஒரு அதிகாரியும் வந்து பார்க்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட கேங்மேன் தொழிலாளிக்கு ஆகும் மருத்துவ செலவு கள் முழுமையாக மின்சார வாரியமே ஏற்க வேண்டும், மின் பழுது பணி முழுமை யாக முடியும் முன்பு அங்கு மின் வினி யோகம் செய்தது எப்படி என விசாரணை நடத்த வேண்டும், துணை மின் நிலை யத்தில் நிரந்தர பணியாளர்கள் இருக்கும்போது, அனுபவம் குறைவான கேங்மேன் தொழிலாளியை அனுமதித்தது எப்படி என விசாரணை நடத்த வேண்டும், துணை மின் நிலையத்தில் பணியாற்றும் போது, மின்சாரம் இருக்கும் பகுதிகளில் யாரும் உள்ளே செல்லாமல் இருக்க தடை கயிறு கட்டுவது வழக்கம். ஆனால் தற்போது ஏன் கயிறு கட்டவில்லை என்று விசாரணை நடத்த வேண்டும், மேற்கு கோட்டத்தில், களப்பிரிவில் பணி யாற்றும் கேங்மேன், ஒயர்மேன்கள் மின் விபத்துக்கு உள்ளாவது தொடர்கிறது. தவறுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீதும், சம்பவங்கள் குறித்து பாராமுகமாக உள்ள அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தடை

சென்னை, அக்.14- சென்னையில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன. இதில் தினந்தோறும் பல்லா யிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கம்-பூந்த மல்லி வரையிலான வழித் தடத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை முதல் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தடை விதிப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேயர் பிரியா கூறுகையில், சென்னையில் பண்டிகைக் கால கூட்ட நெரிசல் மற்றும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு மெட்ரோ பணிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மழைக்காலம் முடிந்ததும் ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்துக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது என்றார்.