tamilnadu

டிரம்ப் - மோடி தனிப்பட்ட உறவு இப்போதும் வலுவாகவே உள்ளது

டிரம்ப் - மோடி தனிப்பட்ட உறவு  இப்போதும் வலுவாகவே உள்ளது

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேச்சு

புதுதில்லி, செப். 6 - அமெரிக்காவுடனான இந்தியா வின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்ப தாகவும், டிரம்ப்புடன் எப்போதும் வலு வான தனிப்பட்ட உறவை பிரதமர் மோடி கொண்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரி வித்துள்ளார். மேலும், “நாங்கள் அமெரிக்கா வுடன் தொடர்ந்து தொடர்பில் இருக் கிறோம். இந்த நேரத்தில், அதற்குமேல் என்னால் சொல்ல முடியாது” என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கு வதைக் காரணமாகக் காட்டி, இந்தியா மீது 50 சதவிகித வரி விதிப்பதாக அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதனால், இந்திய ஏற்றுமதித் தொழில் துறை கடுமையான பாதிப்புக்கு உள்ளா கியுள்ளது.  இதனிடையே, ஷாங்காய் உச்சி மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரு டன் இந்தியப் பிரதமர் மோடி ஓரணி யில் திரண்டது, டிரம்ப்பிற்கு சிக்கலை ஏற்படுத்தியது. தனது வயிற்றெரிச்ச லை சமூக வலைதளத்தில் கொட்டிய டிரம்ப், “இருண்ட சீனாவிடம் இந்தி யாவை இழந்துவிட்டோம்” என்று ஓலமிட்டிருந்தார். அதுமட்டுமன்றி, வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் பேசிய டிரம்ப், “நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இரு ப்பேன், அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத் தில் அவர் செய்வது எனக்குப் பிடிக்க வில்லை. ஆனால் இந்தியாவும், அமெ ரிக்காவும் ஒரு சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. எனவே கவலைப்பட ஒன்றுமில்லை” என்றும் தனது நிலை யிலிருந்து இறங்கினார். டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு ‘எக்ஸ்’ தளத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, “ஜனாதிபதி டிரம்பின் உணர்வுகளையும், எங்கள் உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டை யும் ஆழமாகப் பாராட்டுகிறேன், முழு மையாகப் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் தொலை நோக்கு பார்வையுடைய நல்லுறவை கொண்டுள்ளன” என்று பதிலுக்கு ஆனந்தக் கண்ணீர் விட்டார். இந்தப் பின்னணியிலேயே, டிரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்ட உறவை பிரதமர் மோடி கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.